APKLAND TV
Welcome
Login

Vasantham TV

Thanks! Share it with your friends!

URL

You disliked this video. Thanks for the feedback!

Sorry, only registred users can create playlists.
URL


Added by Admin in Tamil Live TV Entertainment TV
3,782 Views

Description

இலங்கையில் முதன்முதலாக தொலைக்காட்சி சேவையை அறிமுகப்படுத்திய சுயாதீன தொலைக்காட்சி சேவையானது, இலங்கையின் முன்னோடி தொலைக்காட்சி நிறுவனமாகும். இது 1979 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. அத்தோடு 1979 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 5 ஆம் திகதி இந்த நிறுவனம் அரச உடைமையாக்கப்பட்டது.

இதுவே இலங்கையிலுள்ள தொலைக்காட்சி சேவைகள் அனைத்திற்கும் முன்மாதிரியான தொலைக்காட்சி சேவையாக அமைந்ததோடு, லக்ஹன்ட சிங்கள வானொலிச் சேவை, வசந்தம் எஃப். எம் தமிழ் வானொலிச் சேவை என ஊடக சேவைகளை ஆரம்பித்து, ஒரு சுயாதீன ஊடக வலையமைப்பாக மாறி இலங்கையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இந் நிறுவனத்தின் தற்போதைய தலைவராக திரு. ஹேமசிரி பெர்னான்டோ பதவி வகித்து வருகிறார்.

2009 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 25 ஆம் திகதி சுயாதீன ஊடக வலையமைப்பின் தமிழ்த் தொலைக்காட்சி சேவையாக ‘வசந்தம் தொலைக்காட்சி’ ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் மேல் மாகாணத்துக்கு மட்டுமே தனது சேவையை வழங்கியிருந்த வசந்தம் தொலைக்காட்சியானது, நாளடைவில் யாழ்ப்பாணத்துக்கும், தெற்காசியாவிலேயே மிகவும் உயரமான ஒளிபரப்புக் கோபுரத்தைக் கொண்ட கொக்காவில் தொலைத்தொடர்பு கோபுரத்தின் மூலம் வடக்கு மாகாணம் முழுவதற்குமாக தனது சேவையை விஸ்தரித்தது. அதனைத் தொடர்ந்து மடுல்சீமை ஒளிபரப்புக் கோபுரம் மூலமாக ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்துக்கும், கிழக்கு மாகாணம் முழுவதற்குமாக தனது சேவையை விஸ்தரித்துள்ளது. வசந்தம் தொலைக்காட்சியின் முகாமையாளராக திரு. முருகேசு குலேந்திரன் அவர்கள் பதவி வகித்து வருகிறார்.

Post your comment

RSS